Skip to content Skip to footer

அவருடைய சாயலில்

அவருடைய சாயலில் … _தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; … ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்_ (ஆதி. 1:27). தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைப் படைத்தார் என்று வாசிக்கிறோம். அவருடைய சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரோடு உறவாட அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த சாயல் என்பது நமது வெளித்தோற்றத்தைக் குறித்ததல்ல; மாறாக, நமது உள்ளான மனதைக் குறித்தது. நாம் உள்ளத்தில் தேவனைப் போல வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்போது நமது வெளிவாழ்வும் அழகு பெறும். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும்…

நான்தான், நான் அல்ல!

நான்தான், நான் அல்ல! அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்_ (யோவான் 18:25). ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, “இதை நான்தான் செய்தேன்” என கூற ஒரு துணிச்சல் வேண்டும். அதேவேளை செய்த காரியத்தையும் அல்லது ஒரு உண்மையைக் கூட, “நான் அல்ல” என்று மறுப்பது கோழைத்தனத்தைக் காட்டும். இன்றைய தியானப் பகுதியில் அவ்விதமாக துணிந்து நின்றது யார்? கோழையாக மறுத்தது யார்? இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாஸ், போர்ச் சேவகர் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர், பரிசேயர்களின் ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு…

அறியாதோருக்கு அறிவி!

அறியாதோருக்கு அறிவி! தேவன் புற ஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்_ (அப். 15:12). வருடாவருடமாக லெந்து நாட்களும், பரிசுத்தவாரமும், பெரியவெள்ளியும், உயிர்த்த ஞாயிறும் வந்துபோகிறது. நமது சடங்காச்சாரங்களையும் நாம் ஒழுங்காகக் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் இன்றும், பெரிய வெள்ளி என்பது என்ன? உயிர்த்த தினம் என்பது என்ன என்று அறியாதோர் இருக்கத்தான் செய்கின்றனர். இங்கே பர்னபாவும், பவுலும் புற ஜாதிகள் மத்தியில் தேவன் செய்த அடையாளங்களைக் கூறி புற ஜாதியாருக்கு சுவிசேஷத்தை…