Skip to content Skip to footer

கெஞ்சிப் பிரார்த்தித்தான்!

கெஞ்சிப் பிரார்த்தித்தான்! அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான் (யாத். 32:13). நமக்கு மிகவும் தேவையான ஒன்றுக்காகத்தான் நாம் எப்போதும் கெஞ்சுவோம். எப்படியாவது கெஞ்சிக் கேட்டாவது காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று நாம் எண்ணுவதுண்டு. அநேகமாக, நமது சொந்தத் தேவைக்காகவோ அல்லது நமக்கு அதிக நெருக்கமானவரின் தேவைகளுக்காகவோதான் நாம் கெஞ்சிப் பிரார்த்திப்பதுண்டு, இல்லையா! ஆனால் இங்கே மோசே எதற்காகக் கெஞ்சிப் பிரார்த்தித்தார் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். அவர் தனக்காகவா வேண்டினார், இல்லை! மோசே…

உள்ளங்கையில் வரைந்தார்!

உள்ளங்கையில் வரைந்தார்! இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது (ஏசாயா 49:16). ஒருவருடைய கைக்கடிகாரம் உட்பக்கமாக திரும்பியிருப்பதைக் கண்டு அதை நான் திருப்ப முயன்றபோது, “நான்தான் அவ்விதமாகக் கட்டியிருக்கிறேன். உட்பக்கமாக இருந்தால் அது பாதுகாப்பாக இருக்கும், கீறல்கள் விழாது” என்றார் அவர். சாதாரணமாக, ஒரு எண்ணையோ அல்லது விலாசத்தையோ உள்ளங்கையில் எழுதி வைப்பார்கள். காரணம், உள்ளங்கையில் எழுதுவது இலகுவில் அழிந்துவிடாது. ஆனால், இங்கே கர்த்தரோ, எழுதவில்லை, மாறாக, “என் உள்ளங்கைகளில்…

சுகமடைய விரும்புகிறாயா?

சுகமடைய விரும்புகிறாயா? உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்து போனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது_ (யோவான் 5:9). கிறிஸ்தவர்கள் என்று நம்மைச் சொல்லிக்கொண்டு, ஊழியங்களிலும் சபைக் காரியங்களிலும் அதிக ஆர்வம் காட்டுகின்ற நம்மில் எத்தனைபேர் மெய்யாகவே பாவக்கட்டுகளில் இருந்து விடுபட்டு, கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பெற்றவர்களாய் மறுபிறப்பின் மெய்யான அனுபவத்துடன் இருக்கிறோம்? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். முப்பத்தெட்டு வருடமாக, வியாதிப்பட்டிருந்த ஒரு மனிதன், அந்தப் பெதஸ்தா குளத்து கரையிலே சுகமடையாதவனாக அமர்ந்திருக்கிறான்.…

வார்த்தையை நம்பினான்!

வார்த்தையை நம்பினான்! இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்_ (யோவான் 4:50). வார்த்தையிலே கட்டப்படுகிற வாழ்வு எப்படிப்பட்டது என்பதை விளக்க ஆண்டவர், சிறுபிள்ளைகளுக்கு விளங்கவைப்பதுபோல தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு விளங்க வைத்தார். அதாவது கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டினவன் ஒருவன்; பெருமழை சொரிந்து காற்று அடித்தும், அது உறுதியான அஸ்திபாரத்தில் கட்டப்பட்டிருந்ததால் விழவில்லை. மணலின்மேல் தன் வீட்டைக் கட்டினவன் மற்றவன்; அதன்…

ஆபத்தில் தேடினார்கள்!

ஆபத்தில் தேடினார்கள்! உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது_ (ஓசியா 6:4). காலையில் வானத்தை மேகம் மூடியிருந்தால், இன்று மழை வரப்போகிறது என்போம். ஆனால் சற்று நேரத்தில் அந்த மேகம் விலகிப்போய் நல்ல வெயிலும் வரும். அதுபோலவே விடிகாலையில் பனிபெய்து ஈரமாக இருக்கும்; சற்று நேரத்தில் எல்லாமே காணாமற்போய்விடும். இப்படியே தேவன்மீது கொண்டுள்ள பக்தி இருக்குமேயாயின் அதனால் என்ன பலன்? மேகத்தைப்போல, பனியைபோல ஒழிந்துபோவதேன்? கர்த்தர் தம்மைவிட்டு விலகிப்போகும் இஸ்ரவேலை திரும்பவும்…