ஆபத்தில் தேடினார்கள்!
உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது_ (ஓசியா 6:4).
காலையில் வானத்தை மேகம் மூடியிருந்தால், இன்று மழை வரப்போகிறது என்போம். ஆனால் சற்று நேரத்தில் அந்த மேகம் விலகிப்போய் நல்ல வெயிலும் வரும். அதுபோலவே விடிகாலையில் பனிபெய்து ஈரமாக இருக்கும்; சற்று நேரத்தில் எல்லாமே காணாமற்போய்விடும். இப்படியே தேவன்மீது கொண்டுள்ள பக்தி இருக்குமேயாயின் அதனால் என்ன பலன்? மேகத்தைப்போல, பனியைபோல ஒழிந்துபோவதேன்?
கர்த்தர் தம்மைவிட்டு விலகிப்போகும் இஸ்ரவேலை திரும்பவும்…
இரண்டாம் கற்பனை!
இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே_ (மாற்கு 12:31).
‘கிறிஸ்தவ வாழ்வென்பது, நானும் என் கடவுளும்’ என்று ஒரு வட்டத்துக்குள் வாழும் வாழ்வு கிடையாது. நான் கடவுளோடு வாழும் வாழ்வானது, பிறர் மத்தியில் பிரதிபலிக்கிற வாழ்வாக, கடவுளின் அன்பை பிறருக்குக் காட்டுவதாக அமையவேண்டும். இந்த லெந்து நாட்களை நாம் முக்கியமாக உபவாச நாட்களாகக் கழிப்பதுண்டு. இந்த உபவாச நாட்கள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று தேவனுடைய வார்த்தையானது நமக்குப் பல…
கீழ்ப்படியாமை!
தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்_ (எரே. 7:24).
“ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையினாலேயே இன்று நாம் கஷ்டப்படுகிறோம். அன்று அவர்கள் தேவனின் சொற்கேட்டு கீழ்ப்படிந்து நடந்திருந்தால் இன்று நாம் சுகமாக ஏதேனிலே வாழ்ந்திருக்கலாம்” என்று முணுமுணுப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாம் இன்று எத்தனை காரியங்களுக்கு கீழ்ப்படியாமல், கீழ்ப்படிய மனமில்லாமல் இருக்கிறோம்.
“என் கற்பனைகளுக்குச் செவிகொடுங்கள்” என்ற ஒன்றையே தேவன் தமது மக்களுக்குத் திரும்பத்திரும்ப சொன்னார். “ஆனால், அவர்களோ அதைக்…
சமீபமாய் இருக்கிறார்!
…கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல…_ (உபா. 4:7).
“என் கரம் உம் கையைப் பிடித்துச்சென்றால் தவறவிடுவேனே, ஆனால் உம் கரம் என் கையைப் பிடித்துச்சென்றால் ஒருக்காலும் தவறிடேனே” என்று ஒரு பக்தன் அழகாகப் பாடிவைத்தான். இதில் எவ்வளவு உண்மையிருக்கிறது. பல வேளைகளிலும் நாம்தான் தேவனின் கரத்தை விட்டுவிட்டுத் தூரமாய்ப் போய் விடுவதுண்டு. பின்பு ஆபத்து வந்ததும், “ஐயோ! ஆண்டவர் என்னைக் கைவிட்டுவிட்டார்” என்று புலம்புவதுண்டு. நாம் அவர் கையைவிட்டுப் போய்விட்டதை உணருவது…
மன்னித்து, மன்னிப்பைப் பெறு!
நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்_ (மத்.18:35).
நாம் எப்போதெல்லாம் பாவ அறிக்கை செய்கிறோமோ, அப்போதெல்லாம் உடனடியாகவே தேவன் நம் பாவங்களை நமக்கு மன்னித்து விடுதலையைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், நமக்கு விரோதமாகத் தவறு செய்தவர்கள் அதை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாலும், மன்னிப்புக் கொடுக்க பின்நிற்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறோமா? மன்னிப்பைப்பெறும் நாம் மன்னிக்கத் தயங்குவது ஏன்?
இன்றைய…
