Skip to content Skip to footer

நீதியுள்ள தேவன்!

நீதியுள்ள தேவன்! “ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்” (சங்கீதம் 103.6). கர்த்தரைவிட்டுப் பிரிந்து, தன் வாழ்வை வீணடித்த நாட்களைத் திரும்பிப் பார்த்த சாலொமோன் ராஜா, பிற்காலத்தில் தன்னைச் சுற்றி நடப்பவற்றை கண்ணோக்கி ஏறிட்டு பார்த்து மனம் வெதும்பினார். ஒடுக்கப்படுகிறவர்களையும், அவர்கள் தேற்றுவாரின்றி கலங்குகின்ற கொடுமையையும் கண்டார். இன்றும் நாம் அதே காரியங்களைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் சம்பவங்களைக் கேள்விப்படுகிறோம்; பலர் அவற்றில் அகப்பட்டும் இருக்கிறோம். இவற்றால் உள்ளம் சோர்ந்து போகிறது; சில சமயம்…

ஞானமே பிரதானம்!

ஞானமே பிரதானம்! “…ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்” (பிரசங்கி 10:10). நிச்சயமாகவே கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று ஞானம். இது நடை முறை வாழ்வோடு சம்மந்தப்பட்டது. அதிகம் அறிவு இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த ஞானம் வேண்டும். கஷ்டமான சூழ்நிலைகளில் சரியான தீர்மானம் எடுக்க அறிவு பயன்படாது; ஞானமே தேவை. ஞானம் தேவனுக்குப் பயப்படும் பயத்தோடு ஆரம்பித்து, சரியான பாதையில் நடத்தி, தேவனுக்கேற்ற கிரியைகளை நமக்குள் வளர்க்கிறது. இன்று மேலதிகாரிகளுக்கு எதிராக போராடுகின்ற கலாச்சாரம் மலிந்துவிட்டது.…

ஒரேயொரு ஈ!

ஒரேயொரு ஈ! “செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப் போகப்பண்ணும்” (பிரசங்கி 10:1). “வல்லரசு நாடுகளின் பல முக்கிய தலைவர்கள், பணத்துக்காகவே தன் அழகையும் கவர்ச்சியையும் பயன்படுத்திய ஒரு பெண்ணில் மயங்கி பெரிய அழிவுகளைச் சந்தித்தார்கள்” என்று பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை பத்திரிகையில் படித்தேன். பாடுபட்டு சம்பாதித்துக் கொண்ட நற்பெயரை நாசப்படுத்த மதிகெட்ட ஒரு விநாடி போதும். அதிக பணம், நேரம், புத்தி எல்லாமே செலவு செய்து, வாசனை திரவிய தயாரிப்புக்கானவைகளைச்…

ஞானமே சிறந்தது!

ஞானமே சிறந்தது! “…பெலத்தைப் பார்க்கிலும் ஞானமே உத்தமம்…” (பிரசங்கி 9:16). நமது செவித்திறனைச் சோதிக்கும்போது, ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு அதிர்வுகளைக் கொடுத்து, காதின் கிரகிக்கும் தன்மையை அளவிடுவார்களே தவிர, சத்தத்தைக் கூட்டி குறைத்து இந்தச் சோதனையைச் செய்வதில்லை. அறையைச் சுத்தம் பண்ணும்படி எப்படித்தான் சத்தம் போட்டாலும் திரும்பியே பாராமல் தொலைக்காட்சியில் உறைந்துபோயிருப்பாள் மகள். ஆனால், சிநேகிதிகள் வருகிறார்கள் என அம்மா மெதுவாகச் சொன்னாலே போதும்; அவள் ஓடிவந்து தன் அறையைச் சுத்தம் பண்ணுகிறாள். சத்தம் போடுவதைப் பார்க்கிலும் ஞானமாய்…

உயிருள்ளவர்களா? செத்தவர்களா?

உயிருள்ளவர்களா? செத்தவர்களா? “உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப் பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி” (பிரசங்கி 9:4). கூட்டுக்குள் அங்குமிங்கும் நடந்துகொண்டு, படுத்து உறங்கிக்கொண்டு, தன் கெம்பீர கர்ஜனையை மறந்து, இப்படித்தான் நாம் சிங்கத்தை மிருகக்காட்சிச் சாலையில் காண்கிறோம். மிருகங்களுக்கெல்லாம் ராஜா எனப்பட்டாலும், ஆப்பிரிக்கக் காடுகளில் கெம்பீரமாக நடைபோட வேண்டிய சிங்கம், கம்பிகளுக்குப் பின்னே இருக்கும்வரைக்கும் அது செத்ததுபோலத்தானே காணப்படும். அதே சமயம், ‘சீ போ நாயே’ என்று துரத்திவிடப்படும் நாய்களுக்கு இன்று மருத்துவமனைகள், அழகு சாதனங்கள், காப்பகங்கள்கூட…

இன்றைக்கும் நாளைக்கும்……

இன்றைக்கும் நாளைக்கும்...... “…சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டு பிடிக்கக்கூடாது…” (பிரசங்கி 8:17). அது அவளுக்கு முதல் பிரசவம். குறித்த நாளில் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட மனைவிக்கு சற்று பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் சொன்னாலும் கணவன் நம்பிக்கையோடு காத்திருந்தான். இறுதியில் தாயை மாத்திரமே மருத்துவர்களால் காப்பாற்ற முடிந்தது. இரு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களுக்கு இன்னொரு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் “அந்த முதல் பிள்ளை ஏன் இறந்தது” என்ற அவர்களது உள் மனக் கேள்விக்கு அவர்களிடம் இன்னமும் பதிலில்லை.…