பதவியும் பெருமையும்! உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்கார (மத்.20:26). சபையிலே பெரிய பதவியில் இருக்கவேண்டும், பெருமைக்குரியவனாக இருக்கவேண்டும், சபையின் தூணாக இருக்கவேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவோர் பலர். “சபையிலே தூணாக இருக்க ஆசைப்படாதீர்கள். ஏனெனில், தூண்கள் ஒருபோதும் வளருவது கிடையாது. நாம் கிறிஸ்துவுக்குள்ளாக வளரும்படிக்கும், கனிகொடுக்கும்படிக்குமே அழைக்கப்பட்டுள்ளோம்” என்றார் ஒரு ஊழியர். இது எத்தனை உண்மை! இங்கே ஆண்டவராகிய இயேசு தாம் படப்போகும் பாடுகளைக் குறித்தும், தாம் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படப் போவதைக் குறித்தும், தமது சிலுவை…
கனிகொடுத்தல்! நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள் (யோவான்15:8). நமது வீடுகளில் ஒரு கனி மரத்தை நாட்டும்போது, அது ஏற்ற காலத்தில் கனி கொடுக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு சாதாரணமாகவே நமக்குள் இருக்கும். அதிலும் கனி கொடுக்க அதிக காலம் செல்லக்கூடிய மரங்களை நாட்டும்போதுகூட, இதன் கனிகளை நான் காணாவிட்டாலும் எனது வருங்கால சந்ததியினர் அனுபவிப்பார்கள் என்று, நம்பிக்கையோடு நாம் நாட்டுவதுண்டு. சாதாரண மனிதராகிய நமக்குள்ளேயே இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமேயாகில், தனது…
முடிவுபரியந்தம்! துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான் (எசே.18:27). குற்றவாளி கூண்டில் நின்று, குற்றவாளிக்குப் பேச ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது, அவன் தான் வாழ்க்கையில் செய்த நல்ல காரியங்களை எல்லாம் ஒவ்வொன்றாக சொல்லி, முன்னர் தான் எப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்ததை எடுத்துக்கூறினான். ஆனாலும் நீதிபதியோ, முன்னர் செய்த எதுவும் இப்போது உதவாது என்றும், இப்போது செய்த குற்றத்துக்கான தண்டனையை அவன் அனுபவித்தேயாக வேண்டும் என்று தன்…
காயப்படுத்தும் வார்த்தைகள்!! கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள் (1சாமு.1:6). ஒருவருடைய தலையில் தேங்காய் விழுந்ததால் எல்லாருமே மிகவும் பயந்தார்கள். ஆனால் அவரோ, “எனக்கு ஒன்றுமில்லை. விழுந்த இடத்தில் சற்று வலிக்கிறது, அவ்வளவுதான்” என்றார். அனைவரும் ஆறுதலடைந்தனர். அரை மணி நேரம் கழித்து அவரது மூக்கிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்தது. அப்போதுதான் பயந்துபோய் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். வெளிக்காயம் இல்லாவிட்டாலும் சில வேளைகளில் உட்காயங்களே அதிக ஆபத்தானவை. அதுபோலவே ஒருவரை…
கிறிஸ்துவைக் காண்பி! முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று (அப். 11:26). கிறிஸ்தவர்கள் என்று நம்மை சொல்லிக்கொண்டு கிறிஸ்துவின் போதனைக்குப் புறம்பாக நடந்தால் யார்தான் நம்மை நம்புவார்கள். சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணிய சீஷர்களுக்கு அந்தியோகியாவிலே கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கப்பட்டது. அப்படியானால் அவர்கள் கிறிஸ்துவை அவரது போதனைகளைப் பின்பற்றி அவருக்குச் சாட்சிகளாய் வாழ்ந்ததினால்தானே இப்படியொரு பெயர் அவர்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும்! உண்மைதான், இந்தப்பெயர் பெருமைக்குரிய பெயராக அல்ல, கேலிப் பெயராகவே…
எங்கே சமாதானம்? தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள் (கொலோ. 3:15). கோமாளித்தனம் பண்ணி மக்களைச் சிரிக்கவைக்கும் ஒரு மனிதன் இருந்தான். குழப்பத்தில் இருப்போர், சமாதானமற்றிருப்போர், கவலையில் தவிப்போர் யாவருமே அவனது நிகழ்ச்சிகளைப்போய் பார்த்தால் சிறிது நேரமென்றாலும் தமது பிரச்சனைகளை மறந்து இருக்கலாம் என்று சொல்லி பணம் செலவழித்து அவனது நிகழ்ச்சிகளுக்குச் செல்வார்கள். ஆனால் அந்தக் கோமாளி மனிதனோ ஒருமுறை டாக்டரிடம் சென்று தனக்கு சமாதானம் இல்லை, இரவில் நித்திரையில்லை…
