Skip to content Skip to footer

பெருமையை வெல்லும் தாழ்மை!

பெருமையை வெல்லும் தாழ்மை! ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை (1கொரி.15:10). இன்று நான் வாழுகின்ற வாழ்வு, முந்திய வாழ்வைவிட சிறப்படைந்தது ஆச்சரியம்தான். இப்படிப்பட்ட மாற்றத்திற்கு, ஒரு மயிர்க்கொட்டிப்புழு வண்ணத்துப் பூச்சியாக மாற்றமடைந்ததை ஒப்பிடலாம். ஆனால், என்னிலும், என்னுள்ளும் வந்த இந்த மாற்றமானது, பலமுறை விழுந்து எழும்பிய வளர்ச்சியும், மயிர்க்கொட்டிப்புழுவின் மாற்றத்திலும் மேலானது. மயிர்கொட்டிப்புழுவின் மாற்றம் இயல்பானது; என் வாழ்வின் மாற்றமோ இயல்புநிலைக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் நான் அந்தப் புழுவிலும் கீழ்நிலையில்…

கண்களும் மனதும் திறக்கப்படட்டும்!

கண்களும் மனதும் திறக்கப்படட்டும்! அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து… (லூக்.24:45). வேதவாக்கியங்களை வாசிக்கும்போது ஏதாவது புரியாதிருந்தால் நாம் என்ன செய்கிறோம்? ஒன்றில் அதைத் தவிர்த்துவிடுவோம்; அல்லது ஏதாவது துணை நூலை நாடுவோம்; அல்லது யாரிடமாவது கேட்போம். எப்போதாவது பரிசுத்த ஆவியானவரின் துணையை நாடி, அமர்ந்திருந்து அறிய முயற்சித்திருக்கிறோமா? உண்மைதான். அதற்கெல்லாம் நேரம் எங்கே? நாம் எல்லோரும் ஜெபிக்கிறவர்கள், வேதம் வாசிக்கிறவர்கள்; அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த அவசர உலகில், இரவிரவாக விழித்திருந்து விடியற்காலையில்…

என்னை அவர் அறிந்திருக்கிறார்!

என்னை அவர் அறிந்திருக்கிறார்! அவர் மூன்றாம்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, …நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் அறிவீர் என்றான் (யோவான் 21:17). உயிர்த்த இயேசு பேதுருவிடம் சம்பாஷித்த திபேரியா கடலோரத்திலே, இயேசுவின் சிலையொன்றும், அதன் பாதத்திலே மண்டியிட்டு ஏறிட்டுப் பார்ப்பது போன்ற பேதுருவின் சிலையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அது வெறும் சிலைதான்; என்றாலும் அதைப்பார்க்கும்போது பேதுரு அன்று எப்படி மனமொடிந்திருப்பார் என்ற கற்பனை தோன்றும். அன்று பேதுருவிடம் கேட்ட அதே கேள்வியை இன்று இயேசு நம்மிடம் கேட்டால்…?…

என்னைப் பெலப்படுத்துகின்ற இயேசு!

என்னைப் பெலப்படுத்துகின்ற இயேசு! அவர் கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், …கடலிலே குதித்தான் (யோவான் 21:7). அவசர புத்தி, இதுவொரு குணவியல்பு. சில வேளைகளில் இது நன்மை தந்தாலும், பல வேளைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அதன் பின்விளைவுகள் கஷ்டமாகவே இருக்கும். இந்த நாளிலும் ஏதாவது செய்வதற்காக அவசரப்பட்டு முடிவெடுத்திருக்கிறீர்களா? கொஞ்சம் நிதானித்து முன்செல்வது நல்லது. அன்பானவர்களே, பேதுருவின் இடத்தில் நம்மை நிறுத்திப்பார்ப்போம். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், இரவு முழுவதும் பிரயாசப்பட்டு, ஒரு மீனும்…

விடியலில் இயேசு!

விடியலில் இயேசு! விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள் (யோவான் 21:4). எல்லா நம்பிக்கைகளும் சிதைந்து, முயற்சிகள் யாவையும் கைவிட்டு, பிடிப்பற்ற வாழ்வுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத ஒருவர் நம்மைத் தாங்கும்படி நம் முன்னே வந்து நின்றால் எப்படி யிருக்கும்! இப்படியான அனுபவங்கள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் நம் வாழ்வைத் தலைகீழாகவே மாற்றிப்போடுகிறது. அன்று சீஷருக்கும் நடந்தது இதுதான். யோவான் 21ஆம் அதிகாரம் யோவான் சுவிசேஷத்தின் பிற்சேர்க்கை என்று சொல்லப்படுகிறது. இது, “இவைகளுக்குப்…

சந்தேகக் கேள்விகளும் பதில்களும்!

சந்தேகக் கேள்விகளும் பதில்களும்! நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார் (யோவான் 20:29). நம் எல்லோருக்குள்ளும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சந்தேகம் எழத்தான் செய்கிறது. அதில் தவறில்லை. சில காரியங்களை நம்பவேண்டுமென்றால் சில சந்தேகங்களும் கூடவே எழும்பத்தான் செய்கிறது. ஆனால் அந்தச் சந்தேகம், நேர்மறையான பதிலுரையையா? அல்லது எதிர்மறையான பதிலுரையையா? எதைக் கொடுக்கிறது என்பதில்தான் நமது எழுச்சியும் வீழ்ச்சியும் தங்கியிருக்கிறது. மனதில் எழுகின்ற சந்தேகங்கள் ஒளிவுமறைவின்றி கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான பதில் சுத்தமனதோடு கண்டுகொள்ளப்படுமானால் அது…