சந்தோஷமாயிரு! “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்” (சங்.5:11). நிச்சயமில்லாத எதிர்காலத்தைக் குறித்தும், நிச்சயமாய் சம்பவிக்கப் போகின்ற மரணத்தைக் குறித்தும் அடிக்கடி குறிப்பிடுகின்ற பிரசங்கி, தேவனை நம்பி அவரை நேசிக்கிறவர்கள், தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜீவிய நாட்களை சந்தோஷமாகக் கழிப்பது தேவன் அருளிய ஈவு என்பதையும் குறிப்பிடுகிறார். தேவ பயமற்று கீழ்ப்படியாதவனுக்கோ, வாழ்நாள் மாயையாக, பலனற்றதாக, நோக்கமற்றதாக வெறுமையானதாக இருக்கும். ஆனால், கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ, சில சமயம் காரணங்கள் விளங்காவிட்டாலும்கூட சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே…
காரணமில்லாத பயங்கள்! அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச் சேர்ந்த பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய்… (1இராஜா.19:3). காரணமில்லாத பயம் நமக்குப் பெருங்கேடு விளைவிக்கும். வான்ஸ் ஹாவ்னர் என்பவர் அடிக்கடி ஒரு கதை சொல்லுவார். ஒரு மனிதன் ஓர் இரவு முழுவதும் ஒரு கல்லறைத் தோட்டத்தினுள் அலைந்து திரிந்தான். விழுந்து எழுந்தும், புதர்களில் உரசியும் அங்கிருந்து விரைவில் வெளியேறிவிட்டான். மறுநாள் காலையில் ஒருவர் இவனிடம், “பூதங்களால் நம்மைத் தாக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா” என்று கேட்டார்.…
ஆண்டவருடைய வல்லமையுள்ள கரம்! கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான் (1இராஜா.18:46). பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்களுக்கு, மலைச்சரிவில் வேகமாகச் சறுக்கிச்செல்வது பிரச்சனையல்ல; மறுபடியும் மலைச்சிகரத்தில் ஏறுவதுதான் பிரச்சனை. செங்குத்தான மலைகளில் ஏறுவதற்காகவே சறுக்கு லிப்டுக்கள் உருவாயின. ஆனால், இப்போது ஒரு நவீன கால கண்டுபிடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஸ்கை சவாரி என்று பெயர். இதற்குக் காற்றின் சக்தியால் இயக்கப்படும் பாய் அல்லது பாரசூட் போன்ற ஒரு சாதனம் தேவை.…
ஏழு தடவை ஜெபித்தல்! ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான் (1இராஜா.18:44). தேவனிடத்தில் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்குப் பதில் பெற்றுக்கொள்வதைக் குறித்து, ஜார்ஜ் முல்லர் கூறும்போது: “தேவனிடத்திலிருந்து பதில் வரும்வரை ஜெபிப்பதை நிறுத்தாதீர்கள். எனது நண்பர் ஒருவரின் இரு மகன்மாரின் மனந்திரும்புதலுக்காக நான் 52 வருஷங்களாக ஜெபிக்கிறேன். அவர்கள் இதுவரை மனந்திரும்பவில்லை. ஆனால் மனந்திரும்பிவிடுவார்கள். அவர்கள் மனந்திரும்பும்வரை நான் ஜெபிப்பதை நிறுத்தப்போவதில்லை” என்றார். ஆம், தேவனுடைய பிள்ளைகள் செய்யும்…
ஒரு நிச்சயமான எதிர்பார்ப்பு! பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜன பானம் பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான் (1இராஜா.18:41). பல வாரங்களாக மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டதைக் கண்ட விவசாயிகள், தமது சிறிய கிராமப்புற ஆலயத்தில் ஒருநாள் அனைவரும் திரண்டு வந்து ஒருமனதாக மழைக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர். அந்தக் குறிப்பிட்ட ஜெபநாளில் சபைப்போதகர் ஆராதனை நடத்த மேடைக்கு ஏறிவந்து சபையாரைச்சுற்றிலும் கவனித்த பின்பு, சபையாரை நோக்கி, “நான் இப்பொழுது ஆசீர்வாதம்…
எப்போதும் பரிபூரணம்! அப்பொழுது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து…. (1இராஜா.18:38). பல தடவைகளில், சிறு சிறு விஷயங்கள் நம்மை ஏமாற்றி விடுகின்றன. இதற்கு ஒரு சோகமான உதாரணம் உண்டு. ஒரு ஜம்போஜெட் விமானம் புளாரிடாவில் உள்ள ஆபத்தான மலைச்சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளாயிற்று. 401 என்ற எண் உள்ள இந்த விமானம் நியூயார்க்கிலிருந்து மியாமிக்கு சென்று கொண்டிருந்தது. உல்லாசமாக விடுமுறையைக் கழிக்கும் பயணிகள் அந்த விமானத்தில் நிறைந்திருந்தார்கள். மியாமி விமான…
