Skip to content Skip to footer

எதற்கும் விளைவு உண்டு!

எதற்கும் விளைவு உண்டு! “…தேவனுக்கு …முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள்…” (பிரசங்கி 8:12). ‘உங்கள் வீட்டில் விளையாடிவிட்டு, இரண்டு விளையாட்டுப் பொருள்களை எடுத்து வந்துவிட்ட என் பேரனுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது’ என்று சிநேகிதி சொன்னபோது, ‘அவன் தெரியாமல் எடுத்திருப்பான்; சொல்லி விளங்க வைத்திருக்கலாமே’ என்றேன். அதற்கு அவர், ‘தற்சமயம் அவன் தெரிந்துதான் எடுத்துவந்திருந்தால் அவனுக்கு அது பிழை என்று தெரியவேண்டும். அப்பப்போ அன்பாய் தண்டிக்காவிட்டால், தான் செய்யும் தவறுகளுக்கு தண்டனைக் கிடைக்காது என்று மேலும் அவன் தவறு செய்வானே’ என்றார்.…

தேவனை நோக்கித் திரும்பு!

தேவனை நோக்கித் திரும்பு! “ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரண நாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை” (பிரசங்கி 8:8). பல வருடங்களாக வியாதிப்படுக்கையில் இருப்பவர், ‘இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் மரிப்பேன்’ என்று தன் இளவயதுக் காலத்தில் அறிய வந்திருந்தால், அவரது மனநிலை எப்படி இருக்கும்! ஒன்றில், அதை நினைத்தே வாழ்வின் சந்தோஷங்களையும் நோக்கத்தையும் இழந்துபோவார். அல்லது, இதை மாற்றிப்போட வீண் பிரயத்தனங்கள் செய்து வாழ்வை வீணடிப்பார். பிற்கால வாழ்வையும், மரண நாளையும், நமக்கு மறைத்து வைத்திருக்கும் தேவஞானத்தின்…

வீணனாகாதே!

வீணனாகாதே! “இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக் கொண்டார்கள்” (பிரசங்கி 7:29). சாலொமோன் ராஜாவைவிட மிஞ்சிய ஞானவான் யாரும் இருந்ததில்லை. அவரே, தனக்கிருந்த ஞானத்தினால் எல்லாவற்றையும் ஆராய முற்பட்டு தோற்றுப் போனதை ஒத்துக்கொள்வாராயின், எல்லாம் தெரிந்தவர்கள்போல வாழுகின்ற நம்மைக் குறித்து என்ன சொல்ல? ஆயிரம் பெண்களிடம் சுகத்தைத் தேடிய சாலொமோன், இறுதியில், ‘கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்’ என்றார். ஏனெனில், சாலொமோன்…

வாழ்விலும் தாழ்விலும்!

வாழ்விலும் தாழ்விலும்! “வாழ்வு காலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வு காலத்தில் சிந்தனை செய்” (பிரசங்கி 7:14). “கர்த்தாவே, எனது ஆசீர்வாதங்களை பொறுமையாய் சகித்துக்கொள்ள பெலன் தாரும்’ என்று எழுதி நான்கு பிள்ளைகளின் தாய், தன்னுடைய சமையலறையிலே தொங்கவிட்டிருந்தாளாம். சில சமயங்களில் நன்மைகளே நமக்குத் தொல்லைகளாகி விடுகின்றன. ஏசாவை சந்திக்கப் புறப்பட்ட யாக்கோபு, தன் பரிவாரங்களைக் கண்டு ஏசா என்ன செய்வானோ என்று எண்ணிப் பயப்பட்டான். ‘கர்த்தாவே, அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும்…

கெடுத்துப்போடும் இரட்டையர்கள்!

கெடுத்துப்போடும் இரட்டையர்கள்! “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்” (பிரசங்கி 7:9). ஒரு வேலையாக, அல்லது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளும் ஒரு நல்ல செயலாக இருக்கலாம்; அல்லது, குடும்ப வாழ்வு, பிள்ளைகளின் எதிர்காலம் என்று எதுவாகவும் இருக்கலாம். நல்ல நோக்கத்தோடும் எதிர்பார்ப்போடும், ஒரு முடிவை மனதிலே வைத்துதான் நாம் அநேகமாக எந்தவொரு காரியத்தையும் ஆரம்பிப்பதுண்டு. ஆனால் நாம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கிறதா என்பது சந்தேகமே. துவக்கத்தின் நோக்கம், முடிவிலே சிதைந்துபோகிறது ஏன் என்ற கேள்வி நமக்குள்…

தேவனை நம்பு!

தேவனை நம்பு! “இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும். பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும்” (பிரசங்கி 7:7). மருந்துகளுக்குரிய விலை 1800 ரூபாய்க்குப் பில் எழுதியவர், இந்த பணத்தை எங்கேயாவது பெற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார்? இல்லை, பணத்திற்குக் கடவுளையே நம்பியிருக்கிறேன் என்றேன். வழக்கத்திற்கு மாறாக குழைந்து சிரித்துப் பேசிய அவரைப் பார்க்க விசித்திரமாயிருந்தது. ‘அப்படியானால் இந்த ரசீதை எனக்குத் தருவீர்களா?’ என்று கேட்டேவிட்டார். இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத நான், தடுமாறிவிட்டேன். தனது வேலைத்தலத்தில், அவருக்குள்ள மருத்துவ சலுகையைப் பயன்படுத்தி, தனக்கே மருந்து வாங்கியதாகப்…