உன் பயங்களை எதிர்கொள்! அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப் போய்… (1இராஜா.19:15). பயம் என்பது உலகம் முழுவதிலும் எல்லாரிடமும் பரவியுள்ள ஓர் உணர்வு என்றும், மனிதரிலும், மிருக ஜீவன்களிலும் முதல்முதல் அறியப்பட்ட உணர்வு பயமே என்றும் உயிரியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு குஞ்சுப் பறவை தன் கூட்டிலிருந்து தவறிக்கீழே விழுந்துவிட்டால் இதயம் மிக வேகமாகத் துடிப்பதைக் காணலாம். ஏனெனில், அது இதுவரை பயம் என்றால் என்னவென்று உணர்ந்ததில்லை. இப்போது அதனை ஆட்கொண்டிருப்பது பயம்…
ஆசீர்வதிக்கப்பட்ட அமைதி! பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று (1இராஜா.19:12). குளிர்சாதனப் பெட்டி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பலர் பனிக்கட்டித் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். அங்கு, பனிக்கட்டிப் பாளங்கள் மரத்தூளின் மேல்தான் வைக்கப்படும். ஒருநாள், ஒரு தொழிலாளி தனது விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை தவறவிட்டுவிட்டான். பலர் தேடியும் கைக்கடிகாரம் கிடைக்கவில்லை. மாலை நேரத்தில், ஒரு சிறுவன் காணாமற்போன கடிகாரத்தைத் தனது கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். ஆச்சரியத்துடன், “இது எப்படிக் கிடைத்தது?”…
நான் ஒருவன்மாத்திரம்! நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்… (1இராஜா.19:10). புதிய உலகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் தீரனான பிரான்ஸிஸ் டிரேக் என்பவர், ஒரு தடவை உலகைச் சுற்றி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டார். கப்பலை சிறிய தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார். அப்போது, ஒரு பெரும்புயல் தோன்றிக் கப்பலை வெகுவாக அசைத்தது. கடல் பயணத்தில் வெகு காலம் அடிபட்ட மனிதரின் அருகில் நின்ற ஒருவன் இப்படிக் கூறினான்: ஆழமான பெருங்கடல்களில் சூறாவளிப் புயல்கள் தாக்கியபோதும்…
நீ இங்கே என்ன செய்கிறாய்? … எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்… (1இராஜா.19:9). ஒரு பெண்மணி ஒரு புரோக்கராக வேலை செய்தபோது, பெரிய பிரமுகர்களுடன் பழகியிருந்தாள். அவள் ஒரு விசுவாசியானபோது, இனி சாதாரண வாழ்வை வாழக்கூடாது. அர்த்தமுள்ள, பிறருக்கு ஆசீர்வாதமான நல்ல வாழ்வை வாழ வேண்டுமென்று உணர்ந்தாள். அவளிடம் மீன் பதப்படுத்தி விநியோகிக்கும் ஒரு நிறுவனம் இருந்தது. அங்கிருந்து அவள் தன்னைப்பார்க்க வருகிறவர்களுக்கு நல்லாலோசனை கூறி, வேதாகமத்தை வாசித்துகாட்டி, நல்வழிப்படுத்தி, ஆவிக்குரிய இளைப்பாறுதல் பெற உதவி செய்ய…
பயணத்துக்குத் தேவையான பெலன்! அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான் (1இராஜா.19:8). ஒரு புதுவருட கொண்டாட்டத்தில், ரோஜாப் பூக்களின் அணிவகுப்பு நடை பெற்றது. சிறுசிறு அலங்கார மலர் வண்டிகள் வெகு நீளமாக அணிவகுத்து வந்தன. திடீரென்று அழகான சிறுமலர் வண்டி ஒன்று ஓசையிட்டுவிட்டு நின்றுவிட்டது. அதனால், அணிவகுப்பு நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. சோதித்தபோது இயந்திரக் கோளாறு எதுவுமில்லை. அந்த மலர் வண்டியை இழுத்துவந்த வண்டியின் எரிபொருள் தீர்ந்துவிட்டிருந்தது. இந்த வண்டி யாருடையதென்று…
எழுந்திருந்து சாப்பிடு! அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது (1இராஜா.19:6). ஒரு வயலில் சில குஷ்டரோகிகள் வேலை செய்துகொண்டிருந்தனர். இதை ஒரு மிஷனெரி கண்டு உற்று கவனித்தார். அவர்களில் ஒருவனுக்கு கால்கள் இல்லை. அடுத்தவனுக்குக் கைகள் இல்லை. ஆனால் இருவரும் இணைந்து, மிக முக்கியமான விதை நடுதலை வயலில் செய்தனர். கால்கள் உள்ளவன் கால்கள் இல்லாதவனைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டான். அவன் தன் கையில் விதைப் பயறு…
