Skip to content Skip to footer

நான் ஒருவன்மாத்திரம்!

நான் ஒருவன்மாத்திரம்! நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்… (1இராஜா.19:10). புதிய உலகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் தீரனான பிரான்ஸிஸ் டிரேக் என்பவர், ஒரு தடவை உலகைச் சுற்றி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டார். கப்பலை சிறிய தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார். அப்போது, ஒரு பெரும்புயல் தோன்றிக் கப்பலை வெகுவாக அசைத்தது. கடல் பயணத்தில் வெகு காலம் அடிபட்ட மனிதரின் அருகில் நின்ற ஒருவன் இப்படிக் கூறினான்: ஆழமான பெருங்கடல்களில் சூறாவளிப் புயல்கள் தாக்கியபோதும்…

நீ இங்கே என்ன செய்கிறாய்?

நீ இங்கே என்ன செய்கிறாய்? … எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்… (1இராஜா.19:9). ஒரு பெண்மணி ஒரு புரோக்கராக வேலை செய்தபோது, பெரிய பிரமுகர்களுடன் பழகியிருந்தாள். அவள் ஒரு விசுவாசியானபோது, இனி சாதாரண வாழ்வை வாழக்கூடாது. அர்த்தமுள்ள, பிறருக்கு ஆசீர்வாதமான நல்ல வாழ்வை வாழ வேண்டுமென்று உணர்ந்தாள். அவளிடம் மீன் பதப்படுத்தி விநியோகிக்கும் ஒரு நிறுவனம் இருந்தது. அங்கிருந்து அவள் தன்னைப்பார்க்க வருகிறவர்களுக்கு நல்லாலோசனை கூறி, வேதாகமத்தை வாசித்துகாட்டி, நல்வழிப்படுத்தி, ஆவிக்குரிய இளைப்பாறுதல் பெற உதவி செய்ய…

பயணத்துக்குத் தேவையான பெலன்!

பயணத்துக்குத் தேவையான பெலன்! அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான் (1இராஜா.19:8). ஒரு புதுவருட கொண்டாட்டத்தில், ரோஜாப் பூக்களின் அணிவகுப்பு நடை பெற்றது. சிறுசிறு அலங்கார மலர் வண்டிகள் வெகு நீளமாக அணிவகுத்து வந்தன. திடீரென்று அழகான சிறுமலர் வண்டி ஒன்று ஓசையிட்டுவிட்டு நின்றுவிட்டது. அதனால், அணிவகுப்பு நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. சோதித்தபோது இயந்திரக் கோளாறு எதுவுமில்லை. அந்த மலர் வண்டியை இழுத்துவந்த வண்டியின் எரிபொருள் தீர்ந்துவிட்டிருந்தது. இந்த வண்டி யாருடையதென்று…

எழுந்திருந்து சாப்பிடு!

எழுந்திருந்து சாப்பிடு! அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது (1இராஜா.19:6). ஒரு வயலில் சில குஷ்டரோகிகள் வேலை செய்துகொண்டிருந்தனர். இதை ஒரு மிஷனெரி கண்டு உற்று கவனித்தார். அவர்களில் ஒருவனுக்கு கால்கள் இல்லை. அடுத்தவனுக்குக் கைகள் இல்லை. ஆனால் இருவரும் இணைந்து, மிக முக்கியமான விதை நடுதலை வயலில் செய்தனர். கால்கள் உள்ளவன் கால்கள் இல்லாதவனைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டான். அவன் தன் கையில் விதைப் பயறு…

அது போதுமா?

அது போதுமா? போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல … (1இராஜா.19:4). டச்சு தேசத்து பிரபல கலைஞர் வின்சென்ட்பென் கோஹ், தனது 24வது வயதில் சுவிசேஷ ஊழியத்துக்குத் தான் அழைக்கப்பட்டதாக உணர்ந்து, 1878ல் ஒரு நற்செய்திப்பணி பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கே பட்டம் பெற்றபின், ஒரு வருட காலம் போதகராக ஊழியம் செய்து, நற்செய்தி அறிவித்து வந்தார். பின்னர் 1889ல் பென் கோஹ் தனது நற்செய்திப்பணிக்கான அழைப்பைத் துறந்துவிட்டார். காரணம் தெரியவில்லை.…

அவருடைய காலடிகளில் …

அவருடைய காலடிகளில் … எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லி … தண்ணீரை அடித்தவுடனே அது இரு பக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான் (2 இராஜா.2:14). “ஒரு சிறுவன் பின்பற்ற விரும்பும் காலடிகள், தன் தகப்பனார் நடந்து முடித்து விட்டதாக நினைத்து மூடிவிட்ட காலடிகளாகும்” என்றார் ஒருவர். ஆனால், எலியாவின் வாழ்க்கையில் அப்படி இல்லை. எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே” என்று சொல்லித் தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால்…