Skip to content Skip to footer

சுழல்காற்றின் மத்தியில் …

சுழல்காற்றின் மத்தியில் … அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது (2இராஜா.2:11). கழுகுகள் ஒரு வித்தியாசமான பறக்கும் பழக்கத்தைப் பெற்றுள்ளன. அவை புயல் வீசும்போது பெருங்காற்றைக் கண்டு பயந்து தூரமாகப் பறந்து செல்லாமல், அதை நேருக்கு நேராக சந்திக்கும் தன்மை உடையவை. மற்றப் பறவைகள் பயந்து தூர விலகிப் பறந்து செல்லும்போது, கழுகுகள் மட்டும் தங்களை உயரத்தில் உந்தித்தள்ள இந்தக் காற்றுடன் மோதுகின்றன. ஒரு புயல்…

வெளிச்சம் இன்னும் பிரகாசிக்கட்டும் !

வெளிச்சம் இன்னும் பிரகாசிக்கட்டும் ! எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது. அவர்கள் …அக்கரைக்குப் போனார்கள் (2இராஜா.2:8). ஆண்டவருக்குச் சேவை செய்தல் இளைஞர்களுக்கு மட்டும் உரியதல்ல. ஜான்வெஸ்லி என்ற புகழ்பெற்ற தேவ ஊழியர், தனது 90வது வயதில் மரணமடையும் வரை பிரசங்கம் செய்தார். புளாரிடாவிலுள்ள மகதலேனா ஏரியைச் சேர்ந்த கிளாடிஸ் ஸ்டால், 82 வருடங்கள் ஓய்வு நாள் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் தனது 14ஆம் வயதில் கற்பிக்க ஆரம்பித்தார். 96வது வயதிலும்,…

படிப்படியாக …

படிப்படியாக … கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது எலியா, எலிசாவோடே கூடக்… புறப்பட்டுப்போனான் (2இராஜா. 2:1). தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு மனிதன் தன் வாகனத்தை ஓட்டிச் சென்றான். திடீரென ஒரு அடர்த்தியான மூடுபனிக்குள் அகப்பட்டான். எதிரே இருப்பதை அறியமுடியாத ஆபத்தான சூழ்நிலையில், என்ன செய்யலாம் என்று அவன் திகைப்புடன் சிந்தித்தான். பெரிய விளக்குகளின் ஒளி எதிரே சாலையில் இருந்த பிரதிபலிப்பான்களில் பட்டுத்தெறித்துப் பிரகாசிப்பதைக் கண்ட அவனால், சாலையின் அமைப்பு ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. முதல்…

ஜீவனுள்ள நம்பிக்கை!

ஜீவனுள்ள நம்பிக்கை! உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார் (சங்.47:2). ரோம அரசாட்சியினாலும், வைராக்கியமுள்ள யூதராலும், சொந்த வீட்டாராலும் ஆரம்பகால பல கிறிஸ்தவர்கள் பல இன்னல்களை அடைந்தார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், கொலையும் செய்யப்பட்டார்கள். சிதறுண்டு போனார்கள். விசுவாசத்தினிமித்தம் உபத்திரவப்பட்ட அந்த சமயத்தில் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட புதிய விசுவாசிகளுக்கு ஊக்கமளிப்பதாகவே பேதுரு இந்த நிருபத்தை எழுதியுள்ளார். “நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதிய வாழ்வுக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகள்” என ஞாபகப்படுத்தியதோடு, இந்த உலகில் எது நேர்ந்தாலும், எல்லாமே நம்மைக்கைவிட்டாலும்,…

பரிசுத்தஆவியானவரின் பெலன்!

பரிசுத்தஆவியானவரின் பெலன்! இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம் (அப்போஸ்தலர் 2:32). “அப்பாவின் பெயருக்கு ஏன் இழுக்குக் கொண்டுவருகிறாய்” என்று ஒரு வாலிபனிடம் கேட்டபோது, “அப்பாவின் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. அன்று அவர் நடந்தபடி இன்று நானும் நடந்தால் இந்த உலகம் என்னை முட்டாளாக்கிவிடும்” என்றான். வாழ்க்கை மாற்றங்களுக்குக் கால இடைவெளி, சமூக இடைவெளி, சந்ததி இடைவெளி என்று பல காரணங்கள் உண்டு. அதிலும் சில உண்மைகள் இருந்தாலும், நமது முன்னோர் மாதிரியா…

என்னில் என் இயேசு!

என்னில் என் இயேசு! பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, …பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் (அப்.1:8). பெற்றோர் வாழும்போது, “இவள், இவன் எங்களுடைய மகள், மகன்” என்று சொல்வதுண்டு. அவர்கள் மறைந்த பிற்பாடு, நாம், “இன்னாருடைய மகள் அல்லது மகன்” என்று நம்மை மாத்திரமல்ல, மறைந்த பெற்றோரையும் அறிமுகப்படுத்துகிறோம். ஆக, மறைந்த பெற்றோரின் பிள்ளைகள் நாங்கள்தான் என்பதற்கு நாமே சாட்சிகள். இன்னொரு வகையில் சொன்னால், நமது பெற்றோர் தமது பிள்ளைகளை தங்கள் சாட்சிகளாக விட்டுவிட்டு…