Skip to content Skip to footer

Rev. R. Ranjit Suthir M. A., B. D., M. Th.

74 articles published

இங்கே தேவன் இல்லையோ?

இங்கே தேவன் இல்லையோ? இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடத்தில் விசாரிக்கப் போகிறீர்கள்?… (2இராஜா.1:3). புகழ்பெற்ற நாத்திகனான இராபர்ட் டூ இங்கர்சால், தன் மாகாணத்தின் கவர்னர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப்போனான். அந்த வெறியில் அவன் எங்கும் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்துகொண்டு திரிந்தான். ஒருநாள் ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தன் பக்கத்தில் இருந்த ஒருவரிடம், “கிறிஸ்தவம் சாதித்துள்ள ஒரு பெரிய காரியத்தைக் கூறமுடியுமா?” என்று கேட்டான். அப்பெரியவர் இவனுடன் வாதம்…

ஆசீர்வதிக்கப்பட்ட பகைஞன்!

ஆசீர்வதிக்கப்பட்ட பகைஞன்! அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபித்தாயா? என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன் (1இராஜா.21:20). நமக்குப் பகைஞர்கள் என்று காணப்படுகிறவர்கள் நமக்குப் பல நன்மைகளைச் செய்யமுடியும். “ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் உண்மையான நண்பனும், கொடுமையான பகைவனும் இருக்கவேண்டும்” என்கிறார் சாக்ரட்டீஸ். ஒருவன் அவனுக்கு நல்லுபதேசம் செய்யவும், மற்றவன் அவனைச் சுற்றிலும் பார்த்துக்கொள்ளவும் இப்படி ஆகும். பிராங்க்ளின் என்பவர், “உங்கள் பகைவர்களைக் கவனியுங்கள். ஏனெனில் நீங்கள் செய்யும் தவறுகளைக் கண்டுபிடித்து கூறுபவர்கள் அவர்களே” என்றார்.…

திரும்பிப் பார்த்தல் கிடையாது!

திரும்பிப் பார்த்தல் கிடையாது! அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியம் செய்தான் (1இராஜா.19:21). ஆபத்து நிறைந்த அட்லான்டிக் கடலில் ஒரு சிறு கப்பல் துணிச்சலாக பயணம் செய்தது. 66 நாட்களுக்குப்பின், ஒரு குடாக்கடலில் நங்கூரமிட்டது. அதுவரை அக்கப்பலில் இருந்த 102 பயணிகளில் பலர் வியாதிப்பட்டிருந்தனர். கடற்கரைக்கு வெளியே கடுங்குளிர்காலமாயிருந்தது. அந்தக் குளிர் பலரின் உயிரை பறித்தது. பல பிரச்சனைகளின் மத்தியில் கப்பலுக்குள் தப்பிப் பிழைத்த பயணிகளிடம், வசந்த காலம் வந்தபோது, கப்பல் தலைவன், யார் வேண்டுமானாலும் தங்கள்…

முழுவதும் இழக்கப்படவில்லை!

முழுவதும் இழக்கப்படவில்லை! ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற …ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்… (1இராஜா.19:18). தென்னாப்பிரிக்க போயர் யுத்தத்தில், ஒரு மனிதன் தண்டிக்கப்பட்டான். அவன் குற்றவாளியாக கருதப்பட்டான். காரணம், யுத்தம் நேரத்தில், யுத்தம் செய்வதற்கு ஊக்குவிக்காமல், வீரர்களின் மனதைக் குழப்பி, யுத்தத்திலிருந்து பின்வாங்கச் செய்து, ஊக்கத்தை குன்றச் செய்ததே அவன் செய்த குற்றம். தென்னாப்பிரிக்க நகரமான லேடிஸ்மித்தான் தாக்கப்பட்டிருந்தது. போர்வீரர்கள் தற்காப்பு முறையில் வரிசையாக நின்றுகொண்டிந்தார்கள். எதிரிகளின் சேனையின் பலம், நகரம் பிடிக்கப்படப்போவது உறுதி என்றெல்லாம் கூறி போர்வீரர்களின்…

உன் பயங்களை எதிர்கொள்!

உன் பயங்களை எதிர்கொள்! அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப் போய்… (1இராஜா.19:15). பயம் என்பது உலகம் முழுவதிலும் எல்லாரிடமும் பரவியுள்ள ஓர் உணர்வு என்றும், மனிதரிலும், மிருக ஜீவன்களிலும் முதல்முதல் அறியப்பட்ட உணர்வு பயமே என்றும் உயிரியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு குஞ்சுப் பறவை தன் கூட்டிலிருந்து தவறிக்கீழே விழுந்துவிட்டால் இதயம் மிக வேகமாகத் துடிப்பதைக் காணலாம். ஏனெனில், அது இதுவரை பயம் என்றால் என்னவென்று உணர்ந்ததில்லை. இப்போது அதனை ஆட்கொண்டிருப்பது பயம்…

ஆசீர்வதிக்கப்பட்ட அமைதி!

ஆசீர்வதிக்கப்பட்ட அமைதி! பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று (1இராஜா.19:12). குளிர்சாதனப் பெட்டி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பலர் பனிக்கட்டித் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். அங்கு, பனிக்கட்டிப் பாளங்கள் மரத்தூளின் மேல்தான் வைக்கப்படும். ஒருநாள், ஒரு தொழிலாளி தனது விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை தவறவிட்டுவிட்டான். பலர் தேடியும் கைக்கடிகாரம் கிடைக்கவில்லை. மாலை நேரத்தில், ஒரு சிறுவன் காணாமற்போன கடிகாரத்தைத் தனது கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். ஆச்சரியத்துடன், “இது எப்படிக் கிடைத்தது?”…