ஆண்டவருடைய வல்லமையுள்ள கரம்! கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான் (1இராஜா.18:46). பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்களுக்கு, மலைச்சரிவில் வேகமாகச் சறுக்கிச்செல்வது பிரச்சனையல்ல; மறுபடியும் மலைச்சிகரத்தில் ஏறுவதுதான் பிரச்சனை. செங்குத்தான மலைகளில் ஏறுவதற்காகவே சறுக்கு லிப்டுக்கள் உருவாயின. ஆனால், இப்போது ஒரு நவீன கால கண்டுபிடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஸ்கை சவாரி என்று பெயர். இதற்குக் காற்றின் சக்தியால் இயக்கப்படும் பாய் அல்லது பாரசூட் போன்ற ஒரு சாதனம் தேவை.…
ஏழு தடவை ஜெபித்தல்! ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான் (1இராஜா.18:44). தேவனிடத்தில் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பங்களுக்குப் பதில் பெற்றுக்கொள்வதைக் குறித்து, ஜார்ஜ் முல்லர் கூறும்போது: “தேவனிடத்திலிருந்து பதில் வரும்வரை ஜெபிப்பதை நிறுத்தாதீர்கள். எனது நண்பர் ஒருவரின் இரு மகன்மாரின் மனந்திரும்புதலுக்காக நான் 52 வருஷங்களாக ஜெபிக்கிறேன். அவர்கள் இதுவரை மனந்திரும்பவில்லை. ஆனால் மனந்திரும்பிவிடுவார்கள். அவர்கள் மனந்திரும்பும்வரை நான் ஜெபிப்பதை நிறுத்தப்போவதில்லை” என்றார். ஆம், தேவனுடைய பிள்ளைகள் செய்யும்…
ஒரு நிச்சயமான எதிர்பார்ப்பு! பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜன பானம் பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான் (1இராஜா.18:41). பல வாரங்களாக மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டதைக் கண்ட விவசாயிகள், தமது சிறிய கிராமப்புற ஆலயத்தில் ஒருநாள் அனைவரும் திரண்டு வந்து ஒருமனதாக மழைக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர். அந்தக் குறிப்பிட்ட ஜெபநாளில் சபைப்போதகர் ஆராதனை நடத்த மேடைக்கு ஏறிவந்து சபையாரைச்சுற்றிலும் கவனித்த பின்பு, சபையாரை நோக்கி, “நான் இப்பொழுது ஆசீர்வாதம்…
எப்போதும் பரிபூரணம்! அப்பொழுது கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து…. (1இராஜா.18:38). பல தடவைகளில், சிறு சிறு விஷயங்கள் நம்மை ஏமாற்றி விடுகின்றன. இதற்கு ஒரு சோகமான உதாரணம் உண்டு. ஒரு ஜம்போஜெட் விமானம் புளாரிடாவில் உள்ள ஆபத்தான மலைச்சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளாயிற்று. 401 என்ற எண் உள்ள இந்த விமானம் நியூயார்க்கிலிருந்து மியாமிக்கு சென்று கொண்டிருந்தது. உல்லாசமாக விடுமுறையைக் கழிக்கும் பயணிகள் அந்த விமானத்தில் நிறைந்திருந்தார்கள். மியாமி விமான…
முழு நம்பிக்கையுடன் ஜெபித்தல்! அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான் (1இராஜா.18:35). அமெரிக்கா தேசத்தின் பூர்வாங்க நாட்களில், ஒரு யாத்திரீகன் மிசிசிப்பி நதியின் கரைக்கு வந்தான். அங்கே பாலம் இல்லை. அது குளிர்காலத்தின் ஆரம்ப காலம். நதியின் தண்ணீரின் மேல்பகுதி முழுவதும் பனிக்கட்டி உறைந்து காணப்பட்டது. அவன் பாதுகாப்பு நிலையைப்பற்றி அறிய வாய்ப்பில்லை. பனிக்கட்டி தனது எடையைத் தாங்குமா என்று அவன் அறிய முடியவில்லை. எனினும் பயத்துடனும், துணிச்சலுடனும் மெதுவாக ஆற்றில் இறங்கினான். கைகளாலும்,…
வெறுமையான கடவுள்கள்! மத்தியான வேளை சென்ற பின்பு அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்;. ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை; மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை; கவனிப்பாரும் இல்லை (18:29). ரால்ப் பார்ட்டன் ஒரு வெற்றிகரமான கேலிச் சித்திரக்காரர். ஆனால் அவர் ஒரு சீட்டு எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அவர் எழுதிவைத்திருந்ததாவது: “எனது வாழ்வில் துன்பங்களே இல்லை. எனக்கு எண்ணற்ற நண்பர்கள் உண்டு. நான் என் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்துள்ளேன். நான் ஒரு மனைவியைவிட்டு…
