Skip to content Skip to footer

Rev. R. Ranjit Suthir M. A., B. D., M. Th.

88 articles published

துக்கம் நல்லது!

துக்கம் நல்லது! “நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம், முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்” (பிர.7:3). ‘நிம்மதியே இல்லை. ஒன்றுமாறி ஒன்றாக துன்பங்கள் தொடருகின்றன’. இப்படிச் சொல்லி வேதனைப்படுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். நம்மை நாமே ஒரு கேள்வி கேட்போமா? நமது துன்பங்கள் நமக்குப் பாரம் என்று நினைத்தால், எப்படிப்பட்ட சந்தோஷத்தை நான் எதிர்பார்க்கிறோம்? இதற்குரிய சரியான பதிலைக் கண்டுகொண்டால், நமது ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பது புரியும். கர்த்தர் தவறான வழிகளில், உலகம் தருகின்ற வழிகளில் நமக்கு சந்தோஷங்களைத்…

நாமும் ஒருநாள்…

நாமும் ஒருநாள்… “இதிலே (துக்கவீடு) எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும். உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்” (பிரசங்கி 7:2). புசித்துக் குடித்துத் தன் பிரயாசத்திலே மகிழ்ந்து, இப்படியாக தேவன் தந்தவற்றை அனுபவிப்பதே மனுஷனுக்கு நல்லது என்று கூறிய பிரசங்கி, இப்போது வேறு பக்கத்திற்குத் திரும்புகிறார். தேவன் தந்தவற்றில் மகிழ்ந்திருப்பதில் தவறு இல்லை. ஆனால் கஷ்டங்களும் வரும் என்பதையே சாலொமோன் விளக்குகிறார். சந்தோஷங்கள், வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்று நினைக்க வைக்கும் துயரங்களோ, வாழ்வு குறுகியது என்றும், ஆகவே நாம்…

நம்மை அறிந்தவர் கரத்தில்………

நம்மை அறிந்தவர் கரத்தில்......... “…மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” (பிரசங்கி 6:12). தன் பிள்ளை வெளிநாட்டில் வாழவேண்டும் என்பதில் மிகுந்த வைராக்கிய மாயிருந்த ஒரு தாய், எப்படியோ வெளிநாட்டுக்காரருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டாள். ஆனால், தன் மகளின் வெளிநாட்டு ஜீவியம் இரண்டு ஆண்டுகள்தான் நிலைக்கும் என்பது அந்தத் தாய்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனிக் கதறி அழுதும் என்ன பலன்? இனி நடக்கப்போவது என்ன, நமது மரணம் நிகழப்போகும் விதம் என்ன…

தேவனோடே போராடுவதா?

தேவனோடே போராடுவதா? “தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் (மனுஷனால்) கூடாது” (பிரசங்கி 6:10). பழைய நிலையை மறப்பதும், அடுத்தது என்ன என்ற பயத்தைத் தவிர்ப்பதும் மனித இயல்பாகிவிட்டது. வயது முதிரும் என்ற உண்மையையும், நிச்சயமான மரணத்தையும், பின்னால் என்னவாகும் என்று தெரியாத நிலைமையையும் அசட்டை செய்து, ‘எல்லாம் நமது கைகளில்தான் இருக்கிறது’, என்பதுபோல் வாழுவது மடமையாகும்! ‘மனுஷன் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவன்’, இதுதான் மனிதன் என்ற பதத்தின் அடிப்படையான எபிரெய அர்த்தம். ‘மனிதன்’ என்ற பெயரைக் கொடுத்தது யார்? தேவன்.…

மனதின் நிம்மதி!

மனதின் நிம்மதி!  “மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே. அவன் மனதுக்கோ திருப்தியில்லை” (பிரசங்கி 6:7). உழைப்பதெல்லாம் இந்த ஒரு சாண் வயிற்றுக்குத்தானே என நாம் சொல்வதுண்டு. உண்மைதான், எவ்வளவுதான் உழைத்தாலும் ஓரளவுக்குத்தானே உண்ண முடியும்! அன்றாட உணவுக்கே தள்ளாடுகிறவர்கள் பலர் என்றால், சத்துணவு என்று சொல்லி, வயிறு நிரம்பும்வரை குறைந்த கலோரி உணவைக் கட்டுப்பாட்டோடு சாப்பிடுகிற இன்னொரு சாராரும் உண்டு. ஆனால் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் சற்று நேரத்துக்குள் பசியெடுக்க ஆரம்பித்துவிடும். உழைப்பது, சாப்பிடுவது, இதுதான் வாழ்வா? இயேசு…

தேவ அநுக்கிரகம்!

சந்தோஷமாயிரு! “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்” (சங்.5:11). நிச்சயமில்லாத எதிர்காலத்தைக் குறித்தும், நிச்சயமாய் சம்பவிக்கப் போகின்ற மரணத்தைக் குறித்தும் அடிக்கடி குறிப்பிடுகின்ற பிரசங்கி, தேவனை நம்பி அவரை நேசிக்கிறவர்கள், தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜீவிய நாட்களை சந்தோஷமாகக் கழிப்பது தேவன் அருளிய ஈவு என்பதையும் குறிப்பிடுகிறார். தேவ பயமற்று கீழ்ப்படியாதவனுக்கோ, வாழ்நாள் மாயையாக, பலனற்றதாக, நோக்கமற்றதாக வெறுமையானதாக இருக்கும். ஆனால், கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ, சில சமயம் காரணங்கள் விளங்காவிட்டாலும்கூட சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே…