ஆறு வற்றியபோது… தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று (1 ராஜா 17:7). மார்ட்டின் லூத்தரின் நண்பனான ஜான் பிரென்ஸ் சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லஸினால் வெறுக்கப்பட்டார். அவர் அடிக்கடி ஜான் பிரென்ஸைக் கொலை செய்யவும் முயற்சித்தார். ஒருதடவை அவரைக் கைது செய்து அழைத்துவருமாறு ஒரு பிரிவு போலீஸ்காரர்களை அனுப்பி வைத்தார். இதைக் கேள்விப்பட்ட பிரென்ஸ் ஒரு பெரிய ரொட்டியை எடுத்துக் கொண்டு மறைவாகப் பக்கத்துக் கிராமத்திற்குச் சென்று ஒரு வைக்கோற்போரினுள் ஒளிந்துக் கொண்டிருந்தார். அவர்…
தேவன் பாதுகாக்கிறார்! உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது (2இராஜா.1:10). இரவு நேரத்தில், முரட்டுத்தனமான போர் வீரர்கள் ஜெர்மன் நாட்டின் ஸ்லெஸ்விக் நகர வீதி வழியே சென்றனர். கடுங்குளிரின் மத்தியிலும், வீடுகளின் கதவைத் தட்டி, உள்ளே புகுந்து, சூறையாடி, மக்களைத் துன்புறுத்தியதால், மக்கள் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அந்நகரில், ஒரு மூதாட்டி, தனது விதவையான மகள், பேரனுடன் வசித்துவந்தார். அவள், “ஆண்டவரே, பகைவர் நுழைந்து எங்களைத் துன்புறுத்தாதபடி வீட்டைச் சுற்றிலும் ஒரு தடுப்புச்…
இங்கே தேவன் இல்லையோ? இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடத்தில் விசாரிக்கப் போகிறீர்கள்?… (2இராஜா.1:3). புகழ்பெற்ற நாத்திகனான இராபர்ட் டூ இங்கர்சால், தன் மாகாணத்தின் கவர்னர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப்போனான். அந்த வெறியில் அவன் எங்கும் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்துகொண்டு திரிந்தான். ஒருநாள் ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தன் பக்கத்தில் இருந்த ஒருவரிடம், “கிறிஸ்தவம் சாதித்துள்ள ஒரு பெரிய காரியத்தைக் கூறமுடியுமா?” என்று கேட்டான். அப்பெரியவர் இவனுடன் வாதம்…
ஆசீர்வதிக்கப்பட்ட பகைஞன்! அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபித்தாயா? என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன் (1இராஜா.21:20). நமக்குப் பகைஞர்கள் என்று காணப்படுகிறவர்கள் நமக்குப் பல நன்மைகளைச் செய்யமுடியும். “ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் உண்மையான நண்பனும், கொடுமையான பகைவனும் இருக்கவேண்டும்” என்கிறார் சாக்ரட்டீஸ். ஒருவன் அவனுக்கு நல்லுபதேசம் செய்யவும், மற்றவன் அவனைச் சுற்றிலும் பார்த்துக்கொள்ளவும் இப்படி ஆகும். பிராங்க்ளின் என்பவர், “உங்கள் பகைவர்களைக் கவனியுங்கள். ஏனெனில் நீங்கள் செய்யும் தவறுகளைக் கண்டுபிடித்து கூறுபவர்கள் அவர்களே” என்றார்.…
திரும்பிப் பார்த்தல் கிடையாது! அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியம் செய்தான் (1இராஜா.19:21). ஆபத்து நிறைந்த அட்லான்டிக் கடலில் ஒரு சிறு கப்பல் துணிச்சலாக பயணம் செய்தது. 66 நாட்களுக்குப்பின், ஒரு குடாக்கடலில் நங்கூரமிட்டது. அதுவரை அக்கப்பலில் இருந்த 102 பயணிகளில் பலர் வியாதிப்பட்டிருந்தனர். கடற்கரைக்கு வெளியே கடுங்குளிர்காலமாயிருந்தது. அந்தக் குளிர் பலரின் உயிரை பறித்தது. பல பிரச்சனைகளின் மத்தியில் கப்பலுக்குள் தப்பிப் பிழைத்த பயணிகளிடம், வசந்த காலம் வந்தபோது, கப்பல் தலைவன், யார் வேண்டுமானாலும் தங்கள்…
முழுவதும் இழக்கப்படவில்லை! ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற …ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்… (1இராஜா.19:18). தென்னாப்பிரிக்க போயர் யுத்தத்தில், ஒரு மனிதன் தண்டிக்கப்பட்டான். அவன் குற்றவாளியாக கருதப்பட்டான். காரணம், யுத்தம் நேரத்தில், யுத்தம் செய்வதற்கு ஊக்குவிக்காமல், வீரர்களின் மனதைக் குழப்பி, யுத்தத்திலிருந்து பின்வாங்கச் செய்து, ஊக்கத்தை குன்றச் செய்ததே அவன் செய்த குற்றம். தென்னாப்பிரிக்க நகரமான லேடிஸ்மித்தான் தாக்கப்பட்டிருந்தது. போர்வீரர்கள் தற்காப்பு முறையில் வரிசையாக நின்றுகொண்டிந்தார்கள். எதிரிகளின் சேனையின் பலம், நகரம் பிடிக்கப்படப்போவது உறுதி என்றெல்லாம் கூறி போர்வீரர்களின்…
