Skip to content Skip to footer

பேச்சைக் காத்துக்கொள்!

பேச்சைக் காத்துக்கொள்! “தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு” (பிரசங்கி 5:2). ஒரு முக்கியமான நபரைச் சந்திக்க முன்ஆயத்தத்துடன் போனாலும், அவரைக் கண்டதும், பேசமுடியாமல் வாயடைத்துப் போய் நின்ற அனுபவம் உண்டா? இப்படியிருக்க, வாயையும் பேச்சையும் தந்த தேவனுடைய சந்நிதானத்தில் மாத்திரம் பேசுவதற்கு துணிவது எப்படி? ஆலயத்திற்குப் போவதைக்குறித்துச் சொன்ன பிரசங்கி, தொடர்ந்து, அங்கே பேசுவதைக்குறித்து, அதாவது ஜெபத்தைக்குறித்து எச்சரிக்கிறார். தூக்கத்திலே பேசுகிறவர்களுடைய பேச்சைக் கேட்டிருக்கிறீர்களா? அப்படித்தான் நம் அநேகருடைய…

ஆலயத்துள் நுழையும்போது…

ஆலயத்துள் நுழையும்போது… “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்து … செவிகொடுக்கச் சேர்வதே நலம்” (பிரசங்.5:1). “என் உறவினர் ஒருவரைக்குறித்து அறிந்திருந்ததால் அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு ஒரு பயம். எத்தனை முன் ஒத்திகைகள், எத்தனை ஜெபங்கள்! ஒரு மனுஷனைச் சந்தித்துப் பேச, அவன் சொல்வதைக் கேட்க இத்தனை ஆயத்தமென்றால், தேவாதி தேவனை ஆராதிக்க, அவரது வார்த்தையைக் கேட்க என்ன ஆயத்தத்தோடு போகிறோம்” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். இது அர்த்தமுள்ள கேள்வி அல்லவா! எத்தனை அலட்சியமாக ஆராதனைக்குப்…

எல்லாம் தேவனிடமிருந்து…

எல்லாம் தேவனிடமிருந்து… “தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்” (2கொரி.10:18). தான் அனுபவித்த இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தன் தகப்பனோடு பகிர்ந்து கொண்ட மகள், “அப்பா, நீங்களும் உங்கள் மத வைராக்கியத்தை விட்டு, ஆண்டவருக்கு உங்களை ஒப்புவியுங்கள்” என்று கடிதம் எழுதினாள். அதற்கு அவர் சற்று கோபத்துடன், “83 வருடங்களாக கிறிஸ்தவனாக வாழ்ந்து, ஆலயம்கூடக் கட்டிய எனக்கு, நேற்று பிறந்த நீயா புத்தி சொல்லுகிறாய்? எப்போது உனக்கு ஞானம் பிறந்தது” என்று பதில் எழுதினார். பல வருடங்களாக ஆலயக்…

நீ தனித்தவனல்ல! _

நீ தனித்தவனல்ல! “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” (பிரசங்கி 4:9). “என் மகள் எப்போதும் தன் அறையைப் பூட்டிக்கொண்டு இருக்கிறாள்” என்று தன் வாலிப மகளைக் குறித்து வேதனைப்பட்டாள் தாய். மகளோ, ‘தாயாரையும் நம்ப முடிகிறதில்லை தனித்திருந்துவிட்டால் நலம்’ என்றாள். அவளை அணைத்துப் பழகியபோது அவளுக்குள் ஒருவித பயமும், தனக்கு ஒருவரும் இல்லை என்ற ஏக்கமும் காணப்பட்டது. ஆனால், நாளடைவில், “எனக்கு யாரும் இல்லை என்று தனிமையில் ஏங்கினேன். இப்போது எனக்கு நீங்கள் இருப்பதால் நான் சந்தோஷமாயிருக்கிறேன்” என்றாள்.…

சமநிலை வாழ்வு!

சமநிலை வாழ்வு! “வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்” (பிரசங்கி 4:6). கோலாகலமான திருமண வைபவம்; அபூர்வமான ஜோடனைகள், உடைகள் என்று எல்லாமே வித்தியாசமாய் இருந்தது. திருமண கேக் அத்தனை அழகு! மணப்பெண்ணின் தாயே அதைச் செய்தார்களாம். தன் சிநேகிதியின் மகளின் திருமண கேக்கைவிட தனது மகளின் திருமண கேக் மிகச் சிறந்ததாக இருக்கவேண்டும் என்பதற்காகவே, பல மாதங்களாகத் திட்டமிட்டு, அதிக பணம் செலவு செய்து இந்தக்…

யார் வாசி?

யார் வாசி? “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்” (சங். 92:5). தன் மகன் கெட்டவனாக இருப்பதைக் கண்டு, “மனுஷன் கொடுத்து வைச்சவன், போய்விட்டான்” என்றாள் விதவைத் தாய். “இந்த மனுஷனுக்குப் பிள்ளைகள் பிறந்து, அவர்களும் கஷ்டப்படுவதிலும், பிள்ளை இல்லாமல் இருப்பதே மேல்” என்றாள் இன்னொருத்தி. மனமுடைந்த பிரசங்கியும் வாழுகிறவர்களைவிட ஏற்கனவே இறந்து போனவர்களின் நிலைமை மேலானது என்றும், அதையும்விட இன்னும் பிறவாதவர்களின் நிலைமையே சிறந்தது என்றும் தன் மன வெறுப்பைக் கக்கினார். அவருக்கும் நமக்கும் ஏது வித்தியாசம்!…