Skip to content Skip to footer

Rev. R. Ranjit Suthir M. A., B. D., M. Th.

88 articles published

தந்தையின் அன்பு!

தந்தையின் அன்பு!  அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனை முத்தஞ்செய்தான் (லூக்கா 15:20). குடும்பப் பொறுப்புகளை உதாசீனம் செய்து அக்கறையற்றிருக்கிற சில தகப்பன்மார் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தங்கள் பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களின் படிப்புக்காகவும், எதிர்காலத்துக்காகவும் அர்ப்பணிப்போடு உழைக்கும் தந்தைமார் ஏராளம். இதன் அடிப்படையில், “மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாருண்டோ, கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ? பொல்லாதோர் கூடச் செய்திடார் நற்பிதா நலன்…

இருதயம்!

இருதயம்! எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?  (எரேமியா 17:9). இயேசு வாசற்படியில் நின்று தட்டுவது போன்றதான படத்தை அநேகர் வீடுகளில் வைத்திருக்கின்றனர். இதைப் பார்த்த ஒரு பிள்ளை தன் தாயிடம், “நானும் ஒவ்வொரு நாளுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆண்டவர் தட்டிக்கொண்டே இருக்கிறார். அவருக்கு யாருமே கதவைத் திறக்கவே இல்லையே, ஏன்?” என்று கேட்டதாம். நமது அழுக்கு நிறைந்த சுயநலம் நிறைந்த திருக்கான இருதயத்துக்குள் தேவன் தாமாக அத்துமீறி உட்பிரவேசிக்க மாட்டார். எவனொருவன்…

விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டான்!

விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டான்! வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது (ரோமர் 4:3). ஒரு ஊழியர் சுவிசேஷப் புத்தகத்திலிருந்து வேதப்பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார். அதில் கிறிஸ்தவர்கள் அல்லாத சில வாலிபப் பெண்களும் இருந்தனர். திடீரென கிறிஸ்தவரல்லாத ஒரு பெண் எழுந்து, “நான் இயேசுவை ஆண்டவர் என்று விசுவாசிக்கிறேன்” என்று பகிரங்கமாய் அறிக்கை செய்தாள். எல்லோருக்குமே ஒரு கணம் புல்லரித்துவிட்டது. வழக்கமாக அனைவரும் கண்களை மூடி ஜெபித்திருக்க இயேசுவை ஏற்றுக்கொள்வோர் மெதுவாக கை…

முதலில் நீங்கள் செய்யுங்கள்!

முதலில் நீங்கள் செய்யுங்கள்! ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள் (லூக்.6:36). நம்மைப்பற்றி எதுவுமே சிந்திக்காமல், பிறரைக் குற்றஞ்சாட்டுவது என்பது ஆதாம் ஏவாள் காலம் தொடங்கி மனிதனுக்குள் தொடர்ந்துகொண்டே வருகிறது என்று சொன்னால் அதை மறுக்கமுடியாது. இன்று நாம் செய்வதை விட்டுவிட்டு, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதிலேதான் நாமும் அதிக கவனம் செலுத்துகிறோம்! இன்றைய தியானப்பகுதியில், “நீங்கள் ஆராதிக்கிற பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இருங்கள்” என காண்கிறோம். அதைத் தொடர்ந்து மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்,…

கலக்கம் ஏன்?

கலக்கம் ஏன்? உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்(யோவான் 14:1). அடுத்தடுத்து கலக்கம் நிறைந்த செய்திகளைக் கேட்டால் யார்தான் கலக்கமடையமாட்டார்கள்! உங்களில் ஒருவன் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்று சொல்லிவிட்டார் இயேசு. அவன் யாராயிருக்கும்? இன்னும் கொஞ்சக்காலம் தான் கூட இருப்பதாகவும் சொல்லிவிட்டார். இவர் எங்கே போகிறார்? இயேசுவோடு மரிக்கவும் ஆயத்தமான பேதுருவிடம், நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் எனவும் சொன்னார் இயேசு. கலக்கம் வராமல் எப்படியிருக்கும்? ஆண்டவருக்கு என்னவாகுமோ? தம்மையும் கைதுசெய்வார்களோ? அன்று…

திவ்ய அன்பு!

திவ்ய அன்பு! “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1பேதுரு 1:19). பெரிய வெள்ளி தினமான இன்று நாம் மெய்யாகவே மீட்கப்பட்டிருக்கின்றோமா என்பதை தேவ சமுகத்திலே நின்று நிதானித்துக்கொள்வது நல்லது. இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளை பாரம்பரியமாகத் தியானிக்கும்போது, மெய்யாகவே அந்த சத்தியங்கள் நம்முடைய வாழ்வில் பிரதிபலிக்கின்றதா என்பதை மெய் மனசாட்சியோடு சிந்திப்போமாக. நாம் யார்? இதைக் குறித்து நாம் சிந்திப்பதேயில்லை. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள்தான் நாம்…