Skip to content Skip to footer

உண்மையுள்ளவனென்றெண்ணி…

உண்மையுள்ளவனென்றெண்ணி… இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன் (1தீமோ. 1:12) ஒரு எஜமான் தன் மூன்று ஊழியர்களையும் கூப்பிட்டு, நீங்கள் எனக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்று பார்க்கும்படிக்கு நான் நான்கு குச்சிகளைக் கொண்டுவந்துள்ளேன். இவைகள் நான்குமே ஒரேயளவு உயரமாயுள்ளன. நான் ஒன்றை வைத்திருக்கிறேன். மற்றைய மூன்றையும் உங்கள் மூவருக்கும் தருகிறேன். நீங்கள் உண்மையற்றிருக்கும்போதெல்லாம் உங்கள் குச்சி சற்றே வளர்ந்துவிடும் என்று சொல்லிக்கொடுத்தாராம். சில நாட்களின் பின்னர் அவர்களைக் கூப்பிட்டு குச்சிகளை வாங்கி…

நானே உதாரணம்!

நானே உதாரணம்! நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்… (2தீமோ. 3:10). “ஆண் குழந்தை பிறந்துள்ளது” என்று சந்தோஷமாக தன் தாயிடம் கூறினான் மகன். பேரன் பிறந்த சந்தோஷத்துடன் தாய், “என்ன பெயர் வைத்திருக்கிறாய்” என்று கேட்டார். மகன் பெயரைச் சொன்னபோது, “ஏன் நீ பைபிளில் உள்ள பெயரை வைக்கவில்லை” என்று கேட்டாராம். அதற்கு அந்த மகன், “எல்லோருமே பைபிளில் உள்ள எல்லாப் பெயர்களையும் ஏற்கனவே வைத்துவிட்டார்கள். ஆனால் யாரும் வேதாகம…

கெஞ்சிப் பிரார்த்தித்தான்!

கெஞ்சிப் பிரார்த்தித்தான்! அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான் (யாத். 32:13). நமக்கு மிகவும் தேவையான ஒன்றுக்காகத்தான் நாம் எப்போதும் கெஞ்சுவோம். எப்படியாவது கெஞ்சிக் கேட்டாவது காரியத்தைச் சாதித்துவிடலாம் என்று நாம் எண்ணுவதுண்டு. அநேகமாக, நமது சொந்தத் தேவைக்காகவோ அல்லது நமக்கு அதிக நெருக்கமானவரின் தேவைகளுக்காகவோதான் நாம் கெஞ்சிப் பிரார்த்திப்பதுண்டு, இல்லையா! ஆனால் இங்கே மோசே எதற்காகக் கெஞ்சிப் பிரார்த்தித்தார் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். அவர் தனக்காகவா வேண்டினார், இல்லை! மோசே…

உள்ளங்கையில் வரைந்தார்!

உள்ளங்கையில் வரைந்தார்! இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது (ஏசாயா 49:16). ஒருவருடைய கைக்கடிகாரம் உட்பக்கமாக திரும்பியிருப்பதைக் கண்டு அதை நான் திருப்ப முயன்றபோது, “நான்தான் அவ்விதமாகக் கட்டியிருக்கிறேன். உட்பக்கமாக இருந்தால் அது பாதுகாப்பாக இருக்கும், கீறல்கள் விழாது” என்றார் அவர். சாதாரணமாக, ஒரு எண்ணையோ அல்லது விலாசத்தையோ உள்ளங்கையில் எழுதி வைப்பார்கள். காரணம், உள்ளங்கையில் எழுதுவது இலகுவில் அழிந்துவிடாது. ஆனால், இங்கே கர்த்தரோ, எழுதவில்லை, மாறாக, “என் உள்ளங்கைகளில்…

சுகமடைய விரும்புகிறாயா?

சுகமடைய விரும்புகிறாயா? உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்து போனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது_ (யோவான் 5:9). கிறிஸ்தவர்கள் என்று நம்மைச் சொல்லிக்கொண்டு, ஊழியங்களிலும் சபைக் காரியங்களிலும் அதிக ஆர்வம் காட்டுகின்ற நம்மில் எத்தனைபேர் மெய்யாகவே பாவக்கட்டுகளில் இருந்து விடுபட்டு, கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பெற்றவர்களாய் மறுபிறப்பின் மெய்யான அனுபவத்துடன் இருக்கிறோம்? நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். முப்பத்தெட்டு வருடமாக, வியாதிப்பட்டிருந்த ஒரு மனிதன், அந்தப் பெதஸ்தா குளத்து கரையிலே சுகமடையாதவனாக அமர்ந்திருக்கிறான்.…

வார்த்தையை நம்பினான்!

வார்த்தையை நம்பினான்! இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்_ (யோவான் 4:50). வார்த்தையிலே கட்டப்படுகிற வாழ்வு எப்படிப்பட்டது என்பதை விளக்க ஆண்டவர், சிறுபிள்ளைகளுக்கு விளங்கவைப்பதுபோல தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு விளங்க வைத்தார். அதாவது கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டினவன் ஒருவன்; பெருமழை சொரிந்து காற்று அடித்தும், அது உறுதியான அஸ்திபாரத்தில் கட்டப்பட்டிருந்ததால் விழவில்லை. மணலின்மேல் தன் வீட்டைக் கட்டினவன் மற்றவன்; அதன்…