Skip to content Skip to footer

கீழ்ப்படியாமை!

கீழ்ப்படியாமை! தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்_ (எரே. 7:24). “ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையினாலேயே இன்று நாம் கஷ்டப்படுகிறோம். அன்று அவர்கள் தேவனின் சொற்கேட்டு கீழ்ப்படிந்து நடந்திருந்தால் இன்று நாம் சுகமாக ஏதேனிலே வாழ்ந்திருக்கலாம்” என்று முணுமுணுப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாம் இன்று எத்தனை காரியங்களுக்கு கீழ்ப்படியாமல், கீழ்ப்படிய மனமில்லாமல் இருக்கிறோம். “என் கற்பனைகளுக்குச் செவிகொடுங்கள்” என்ற ஒன்றையே தேவன் தமது மக்களுக்குத் திரும்பத்திரும்ப சொன்னார். “ஆனால், அவர்களோ அதைக்…

சமீபமாய் இருக்கிறார்!

சமீபமாய் இருக்கிறார்!  …கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல…_ (உபா. 4:7). “என் கரம் உம் கையைப் பிடித்துச்சென்றால் தவறவிடுவேனே, ஆனால் உம் கரம் என் கையைப் பிடித்துச்சென்றால் ஒருக்காலும் தவறிடேனே” என்று ஒரு பக்தன் அழகாகப் பாடிவைத்தான். இதில் எவ்வளவு உண்மையிருக்கிறது. பல வேளைகளிலும் நாம்தான் தேவனின் கரத்தை விட்டுவிட்டுத் தூரமாய்ப் போய் விடுவதுண்டு. பின்பு ஆபத்து வந்ததும், “ஐயோ! ஆண்டவர் என்னைக் கைவிட்டுவிட்டார்” என்று புலம்புவதுண்டு. நாம் அவர் கையைவிட்டுப் போய்விட்டதை உணருவது…

மன்னித்து, மன்னிப்பைப் பெறு!

மன்னித்து, மன்னிப்பைப் பெறு! நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்_ (மத்.18:35). நாம் எப்போதெல்லாம் பாவ அறிக்கை செய்கிறோமோ, அப்போதெல்லாம் உடனடியாகவே தேவன் நம் பாவங்களை நமக்கு மன்னித்து விடுதலையைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், நமக்கு விரோதமாகத் தவறு செய்தவர்கள் அதை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாலும், மன்னிப்புக் கொடுக்க பின்நிற்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறோமா? மன்னிப்பைப்பெறும் நாம் மன்னிக்கத் தயங்குவது ஏன்? இன்றைய…

பரிசுத்தர் பாவியாக்கப்பட்டார்!

பரிசுத்தர் பாவியாக்கப்பட்டார்! எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்_ (எபி.4:15). ஆதியிலே சகலவற்றையும் சிருஷ்டித்த தேவன், மனிதனை தமது சாயலாகவே சிருஷ்டித்தார். தமது ஜீவ சுவாசத்தையும் அவனுக்குள்ளே ஊதி அனுதினமும் தம்மோடு உறவாடவென்றே அவனைச் சிருஷ்டித்தார். ஆனால் கீழ்ப்படியாமையினாலே மனிதனோ பாவத்தில் விழுந்தான். அப்படியாக பாவத்தில் விழுந்த மனிதனைக் குறித்து பின்பு சிந்திப்போமென, தேவன் விட்டுவிடவில்லை. உடனடியாகவே அந்த நேரத்தில்தானே மனிதனின் மீட்பைக் குறித்தும் தேவன் வாக்களித்தார் (ஆதி.3:15). அதன்படி, பாவத்தில் அழிந்துபோகும் மனிதனை…

அழைப்பிற்கு உண்மையாயிரு!

அழைப்பிற்கு உண்மையாயிரு! கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்_ . (பிலி.3:14). ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவன் திரும்பிப் பார்க்காமல் ஓடினால்தான் அவனால் வெற்றி பெறமுடியும்; தனது இலக்கையும் சரியாகச் சென்றடைய முடியும். அத்தோடு பந்தயப் பொருளையும் பெற்றுக்கொள்ள முடியும். திரும்பிப் பார்ப்பது அவனது ஓட்டத்தைத் தாமதமடையச் செய்யும், அவனது கவனத்தைத் திசை திருப்பும். அதேவேளை தான் ஓடும்போது மற்றவனும் ஓடுகிறானா என்று பார்ப்பவன் தன் ஓட்டத்தின் நிதானத்தை இழந்துவிடுவான்.…

அவருடைய சாயலில்

அவருடைய சாயலில் … _தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; … ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்_ (ஆதி. 1:27). தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைப் படைத்தார் என்று வாசிக்கிறோம். அவருடைய சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரோடு உறவாட அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த சாயல் என்பது நமது வெளித்தோற்றத்தைக் குறித்ததல்ல; மாறாக, நமது உள்ளான மனதைக் குறித்தது. நாம் உள்ளத்தில் தேவனைப் போல வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்போது நமது வெளிவாழ்வும் அழகு பெறும். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும்…